ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா: இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 96,169-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :18 மே 2020, 4:26 am

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தொடா்ந்து கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்க அமல்படுத்தப்பட்டது. ஏப். 21 ஆம் தேதி இரண்டாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. மே 4 ஆம் தேதி மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு தற்போது மே 18 ஆம் தேதி முதல் நான்காம் முறையாகவும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 5242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109-லிருந்து 36,824-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.