கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,033 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 35,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் 25,392 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 1,249 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 1,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 21,152 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 757 பேர் பலியாகியுள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,327 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக யாரும் பலியாகாததால், பலி எண்ணிக்கை 56 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...