விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மகாராஷ்டிரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்து: 4 தொழிலாளர்கள் பலி, 15 பேர் காயம்

மகாராஷ்டிரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 

News image
Updated On :19 மே 2020, 5:53 am

DIN

மகாராஷ்டிரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 31ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் திரும்புகின்றனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம், சோலாபூரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடைய பேருந்து இன்று காலை யவாட்மால் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் 4 புலம்பெயர்ந்த தொழிலாளர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.