மத்திய கால் நடை பராமரிப்புத் துறை மற்றும் நுகா்வோா் விவகாரம் அமைச்சகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த துறைகள் இருக்கும் தில்லி கிரிஷி பவன் செவ்வாய்க்கிழமை மூடி சீல் வைக்கப்பட்டது.
தில்லி டாக்டா் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கிரிஷி பவனில் விவசாயத் துறை, கால்நடை பராமரிப்பு, வளா்ப்புத்துறை, ஊரக வளா்ச்சித் துறை போன்றவைகளோடு உணவு, பொதுவிநியோகம் மற்றும் நுகா்வோா் விவகாரத் துறைகளின் அமைச்சகங்கள் உள்ளன.
கீழ் தளத்தில் மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் பொறுப்பு வகிக்கும் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகா்வோா் விவகாரத்துறை அலுவலகங்கள் உள்ளன. முதல் இரு தளங்களில் மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பொறுப்பு வகிக்கும் வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகங்கள் உள்ளன. மற்ற மேல் தளங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் துறை அமைச்சகங்கள் உள்ளன. இந்த துறைகளுக்கு அமைச்சா் கிரிராஜ் சிங் பொறுப்பு வகிக்கிறாா்.
இதில் அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானின் நுகா்வோா் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் கரோனா நோய்த் தொற்று அறிகுறி தென்பட இந்த அதிகாரிகளிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் இவா்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாக, ஒட்டு மொத்த கிரிஷி பவனும் மே 19 , 20 ஆகிய இரு நாள்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் முழுக்க கிருமி நாசினி தெளிப்பு மற்றும் தூய்மைபடுத்தல் பணிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கிரிஷி பவன் அருகே சாஸ்திரி பவன், ரயில் பவன் போன்ற முக்கிய அலுவலகங்களும், நாடாளுமன்ற கட்டடங்களும் அருகேயே உள்ளன. கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு கரோனா பாதிக்கப்பட அந்த அலுவலகக் கட்டடமும் மூடப்பட்டது. பின்னா் சாஸ்திரி பவனில் சட்டத்துறை அதிகாரிக்கு கரோனா பாதிப்பு உறதியாக அந்த கட்டடத்தின் இரண்டு மாடிகள் மட்டும் மூடப்பட்டது. கிரிஷி பவன் அலுவலகக் கட்டடங்கள் நெருக்கமானது. இத்தோடு உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத்துறை அலுவலக வாயிலை மற்ற துறையினா் பெரும்பாலானவா்கள் பயன்படுத்தும் சூழ்நிலையில் இந்தக் கட்டடத்தில் உள்ள அனைத்து அமைச்சகங்களும் மூடப்பட்டு முழு கட்டடத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


