ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒடிசா, ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :19 மே 2020, 6:49 am

PTI

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ஒடிசா

ஒடிசாவில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 11 மாவட்டங்களிலிருந்து 102 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 978 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், நேற்று வரை ஒரு லட்சம் மாதிரிகள் சோதனை செய்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் 

ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 122 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 5,629 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

தற்போது 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதித்த 3,219 பேர் குணமடைந்துள்ளனர். 2,864 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.