இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கேரளத்தில் 56 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய பேருந்து சேவை; கட்டணம் உயர்வு

கேரளத்தில் 56 நாள்களுக்குப் பிறகு இன்று பேருந்து சேவை தொடங்கியது. ஆனால், மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

News image
Updated On :20 மே 2020, 12:25 pm

DIN


திருவனந்தபுரம்: கேரளத்தில் 56 நாள்களுக்குப் பிறகு இன்று பேருந்து சேவை தொடங்கியது. ஆனால், மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மத்திய அரசு அறிவித்தக் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.

ஒரு சில நகரப் பகுதிகளில் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருந்தது. சில பேருந்துகளில் மட்டும் சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத வகையில் பயணிகள் ஏறினர். பொதுவாக கூட்டம் குறைவாகவேக் காணப்பட்டது. அதே சமயம், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.12 ஆக நிர்ணயிக்கப்பட்டது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.