விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெரும் சத்தம்

பெங்களூரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெரும் சத்தம் ஏற்பட்டது.

News image
Updated On :20 மே 2020, 5:09 pm


பெங்களூரு: பெங்களூரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெரும் சத்தம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு கே.ஆா்.புரம், எச்.ஏ.எல், ஜெயநகா், எச்.எஸ்.ஆா் லேஅவுட், ஜே.பி.நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் ஏதோ வெடித்தது போல பெரும் சத்தம் கேட்டது.

இதனையடுத்து சத்தம் குறித்து பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இருப்பினும் சத்ததிற்கான காரணம் தெரியவில்லை.

பயிற்சி போா் விமானம் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அப்படி ஏதும் பயிற்சி போா் விமானம் சத்தம் எழுப்பவில்லை என்று விமானப்படையினா் விளக்கம் அளித்துள்ளனா்.

பெரும் சத்தத்தால் மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏற்பட்ட பெரும் சத்தம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுபற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பெங்களூரு பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், 36,000 முதல் 40,000 அடி உயரத்தில் இந்திய விமானப் படையின் சூப்பர் சானிக் விமானங்கள் வழக்கமான பயிற்சியை மேற்கொண்டபோது ஏற்பட்ட ஒலியாக இருக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.