மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் மேலும் 80 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,269 ஆக உயர்வு

ஒடிசாவில் புதிதாக 80 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,269 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :23 மே 2020, 7:09 am

ஒடிசாவில் புதிதாக 80 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,269 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 71 பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஒடிசா மாநிலத்தில் 30 மாவட்டங்கள் உள்ள நிலையில், 13 மாவட்டங்களிலிருந்து புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் 19 பேர், பூரி 17, ஜாஜ்பூரில் 14 ஆகப் பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 1,296 ஆகவும், அவற்றில் 826 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 436 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். 7 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.