ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு

சீனாவில் இயங்கி வரும் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை 21 நாட்களுக்குள் செலுத்துமாறு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2020, 7:55 am

PTI


லண்டன்: சீனாவில் இயங்கி வரும் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை 21 நாட்களுக்குள் செலுத்துமாறு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் செயல்பட்டு வரும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் அனில் அம்பானியின் நிறுவனங்கள் 2012ம் ஆண்டு வாங்கிய கடன் திரும்ப செலுத்தப்படவில்லை.

இது குறித்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடன் தொகைக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே, சீன வங்கிகளிடம் இருந்து பெற்ற 5,400 கோடியை 21 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதே சமயம், இந்த கடன் தொகைக்கு அனில் அம்பானி கையெழுத்திடவில்லை என்றும், இது தொடர்பாக சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.