மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்ப் பிரதேசம் புறப்பட்ட சிறப்பு ரயில் ஒடிசா சென்றடைந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அது தவிர 15 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 21ஆம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு புறப்பட்டது. ஆனால் அந்த ரயில் உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூர் செல்வதற்கு பதிலாக, ஒடிசாவின் ரூர்கேலா மாவட்டத்துக்கு சென்று விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும், அந்த ரயில் ரூர்கேலா செல்ல வேண்டியதுதான் என்று அதிகாரிகள் குழப்பமான பதிலை அளித்துள்ளனர். ரயில்வே துறையின் குழப்பத்தால் தற்போது உத்தரப் பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவில் பரிதவித்து நிற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


