உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜ் பகுதியில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அங்கு இன்று 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜ் பகுதியில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
Updated on
1 min read


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அங்கு இன்று 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், அதன் பிறகே வெப்பம் தணியும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு வட இந்திய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக மதிய நேரத்தில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

லக்னௌவில் இன்று 44 டிகிரி செல்சியஸும், ஜான்ஸி பகுதியில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com