மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும்,

News image
Updated On :30 மே 2020, 5:43 am

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இணைந்து தீவிரவாதிகளைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குல்கம் மாவட்டத்தின் மன்ஸ்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஏற்கெனவே இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.