ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது: ஆந்திரத்தில் கடத்தல்காரர்கள் 4 பேர் பலி

ஆந்திரத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடத்தல்காரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

News image
விபத்துக்குள்ளான கார்.
Updated On :2 நவம்பர் 2020, 5:15 am

DIN

ஆந்திரத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடத்தல்காரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

ஆந்திர மாநிலம், கடப்பா - தாடிபத்திரி சாலையில், கோட்டூருக்கும் தோல்லகண்ணேபள்ளிக்கும் இடையே திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் செம்மரம் வெட்டிக்கொண்டு வந்த இரண்டு கார்கள் அதிவேகமாக சென்று வேக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த, டிப்பர் லாரியின் டீசல் டேங்கர் மீது வேகமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

இதுகுறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ மளமளவென எரிந்து கடத்தல்காரர்கள் ஓட்டி வந்த காரில் இருந்த, 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை கடப்பா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இறந்த 4 பேரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் செம்மரம் வெட்ட வந்து கார் தீ பிடித்ததில் காயமடைந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.