ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

“பிகாரில் நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்”: சிராக் பாஸ்வான் கருத்து

பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜனசக்தியின் தலைவர் சிராங் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

News image
லோக் ஜனசக்தியின் தலைவர் சிராங் பாஸ்வான்
Updated On :3 நவம்பர் 2020, 9:00 am

DIN

பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜன்சக்தியின் தலைவர் சிராங் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நிதிஷ் குமார் பிகாரின் முதல்வராகப் போவதில்லை. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள்.” என்றார்.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி கட்சி பிகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.