புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை ராணுவ உதவியுடன் மீட்கும் பணிகள் தீவிரம் -முதல்வர்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது என முதல்வர் சிவராஜ் செளவுகான் தெரிவித்துள்ளார்.

News image

ஆழ்துளைக் கிணறு அருகே ராணுவ வீரர்கள்

Updated On :4 நவம்பர் 2020, 1:26 pm

DIN

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது என முதல்வர் சிவராஜ் செளவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில்,

சேதுபுரா கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகளில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என நம்புகிறேன், அனைவரும் குழந்தைக்காக வழிபடுவோம் என தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஹரிகிஷன் குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் (வயது 3) 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 100 அடிக்கு தண்ணீர் உள்ளதால் சிறுவன் எவ்வளவு அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் என்று தெரியவில்லை.

அண்மையில் தோண்டப்பட்ட அந்த கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.