பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் 'கவுன்ட் டவுன்' தொடங்கியது
நவம்பர் 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டின் 26 மணி நேர 'கவுன்ட் டவுன்' வெள்ளிக்கிழமை தொடங்கியது.


நவம்பர் 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டின் 26 மணி நேர 'கவுன்ட் டவுன்' வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் புதிய ராக்கெட்டுகள் எதுவும் விண்ணில் ஏவப்படவில்லை.
இந்நிலையில் 51ஆவது பி எஸ் எல் வி ராக்கெட்டான பிஎஸ் எல்வி சி 49 ராக்கெட் நாளை (நவம்பர் 7ஆம் தேதி) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-01 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான 26 மணி நேரக் 'கவுன்ட் டவுன்' இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் படங்களை எடுக்கும் தொழில்நுட்பம் கொண்ட சின்தடிக் அபர்சர் ரேடார் இணைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...