மேற்கு வங்கம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் பேரணி
மேற்குவங்கத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.


மேற்குவங்கத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மகாராஷ்டிர மாநிலம் கோஹல்பூரில் காங்கிரஸ் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும் காங்கிரஸ் கட்சியினர் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு பேரணியில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கூட்டணியினரும் ஈடுபட்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், விவசயிகளுக்கு பாதகமான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...