ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மலை மீது ஏறி செல்ஃபி எடுக்கச் சென்ற பெண் பலி

இந்தூர் நகருக்கு அருகேயுள்ள ஒரு சுற்றுலா இடத்தில் செல்ஃபி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :6 நவம்பர் 2020, 6:39 am

DIN

இந்தூர் நகருக்கு அருகேயுள்ள ஒரு சுற்றுலா இடத்தில் செல்ஃபி எடுக்கச் சென்ற பெண் ஒருவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள ஜாம் கேட் பகுதிக்கு நீது மகேஸ்வரி(30)  தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்குச் சென்றுள்ளார். 

அப்போது அங்குள்ள ஒரு சுற்றுலா இடத்தில் செல்ஃபி எடுக்கச் சென்றபோது தவறி மலையின் மீதிருந்து பள்ளத்தாக்கில் விழுந்தார். 

நான்கு மணிநேர தேடலுக்குப் பிறகு உடலை பள்ளத்தாக்கில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். பின்னர் அவரது உடல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.