தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கேரள ஆளுநருக்கு கரோனா பாதிப்பு

கேரள ஆளுநருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில ராஜ்பவன் அறிவித்துள்ளது. 

News image

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கரோனா (கோப்புப்படம்)

Updated On :7 நவம்பர் 2020, 7:53 am

கேரள ஆளுநருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில ராஜ்பவன் அறிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''எனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தொற்று எவ்வாறு பரவியது என்பதற்கான காரணம் தெரியவில்லை. 

இதனால் கடந்த ஒருவாரமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அல்லது சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்புத்துறை பதிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.