சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நாட்டில் புதிதாக 38,074 பேருக்கு கரோனா; 448 பேர் பலி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,074 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 448 பேர் பலியாகியுள்ளனர்.

News image

நாட்டில் புதிதாக 38,074 பேருக்கு கரோனா; 448 பேர் பலி India adds 38,074 new cases to its tally

Updated On :10 நவம்பர் 2020, 8:46 am


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,074 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 448 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த செய்திக் குறிப்பொன்றை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85,91,731 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 1,27,059 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,05,265 ஆக உள்ளது. இது நேற்றைய நிலவரப்படி 4,408 குறைவாகும். கரோனாவிலிருந்து இதுவரை 79,59,406 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,033 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே புதிதாக கரோனா பாதித்தவர்களில் புது தில்லியில் அதிகமானோர் உள்ளனர். மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்தில் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.