கரோனா: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு தொற்று
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,481 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 86,36,012-ஆக அதிகரித்தது. இதே கால அளவில், 50,326 போ் குணமடைந்தனா். இதனால் குணமடைந்தோா் எண்ணிக்கை 80,13,784-ஆக அதிகரித்தது. அதாவது மொத்த பாதிப்பில் 92.69 சதவீதம் போ் குணமடைந்தனா்.
கரோனா தொற்றுக்கு மேலும் 512 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,27,571-ஆக அதிகரித்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 13-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 4,94,657 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 5.83 சதவீதமாகும்.
‘நவம்பா் 9-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 12,07,69,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 11,53,294 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...