ஜோத்பூரில் கட்டட விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
ஜோத்பூரில் பாஸ்னி தொழில்துறை பகுதியில் கட்டுமானத்தில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஸ்னி தொழில்துறை பகுதியில் கட்டுமானம் நடைபெற்றுகொண்டிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கட்டுமானத்தில் உலோக வேலைகள் நடந்து கொண்டிருந்த இடத்தில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய 14 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
விபத்து ஏற்பட்ட கட்டுமானத்தின் உரிமையாளர் அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடுத் தொகை வழங்க முதல்வர் அசோக் கெஹ்லாட் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...