இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது : நிர்மலா சீதாராமன்
மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 4.89 லட்சமாக குறைந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவிகிதமாக உள்ளது என்று கூறினார்.
பொருளாதாரம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது, ''நாடு முழுவதும் சரக்கு - சேவை வரி வசூல் அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொகை சுமார் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020-21ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சியை பெறும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வலிமையான பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், 2021-ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.
ஒரு தேசம், ஒரே ரேசன் அட்டை திட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. நாடுமுழுவதும் இதில், 68.6 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.
61 லட்சம் சிறுகுறு நடுத்தர தொழிலளர்களுக்கு 2.05 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 7,227 கோடி வழங்கப்பட்டுள்ளது. 11 மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக 3,621 கோடி வழங்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்கள் உள்பட 17 மாநிலங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ.1,18,272 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 11 மாநிலங்கள் ரூ.31,136 கோடியைப் பெற்றுள்ளன'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...