ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேற்குவங்கம்: 84% ரயில்கள் இயக்கப்பட்டும் கூட்ட நெரிசல்

மேற்குவங்கத்தில் 84 சதவிகித ரயில்கள் இயக்கப்பட்டும் அலுவலக நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

News image
மேற்குவங்கம்: 84% ரயில்கள் இயக்கப்பட்டும் கூட்ட நெரிசல் (கோப்புப்படம்)
Updated On :12 நவம்பர் 2020, 7:21 am

DIN

மேற்குவங்கத்தில் 84 சதவிகித ரயில்கள் இயக்கப்பட்டும் அலுவலக நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேற்குவங்கத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்கியது.

ரயில்களில் பயணம் செய்யும் பணிகள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கிழக்கு ரயில்வே கேட்டுக்கொண்டது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகள் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு கழுவப்படும் என்றும், பயணிகளின் நடவடிக்கையை கண்காணிக்க ரயில்வே மற்றும் சிவில் காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ரயில்சேவை தொடங்கப்பட்ட இரண்டாவது நாளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ரயில்களில் பயணித்தனர். ரயில் நிலையங்களில் நெரிசலைத் தடுக்கும் வகையில் ரயில்வே காவலர்கள் ஈடுபட்டனர்.

சோனாபூர், பரூய்பூர், மாலிக்பூர், சேரம்பூர், பராக்பூர், நைஹாடி ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்நிலையங்களில் பயணச் சீட்டிற்காக ரயில்நிலையத்திற்கு வெளியேயும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரயில்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பயணிகள் அமருவதற்கு தடை செய்யப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த இருக்கையிலும் மக்கள் அமர்ந்து பயணம் செய்தனர்.

கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே சார்பில் மொத்தம் 615 ரயில்கள் இயக்கப்படுவதாகவும்,  பயணிகள் வசதிக்காக காலை, மாலை அலுவலக நேரங்களில் மொத்த ரயில்களில் 84 சதவிகித ரயில்கள் இயக்கப்படுவதாகவும்  கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

காலை அலுவல் நேரத்தில் அதிக அளவிலான மக்கள் பயணிப்பதால் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியும் நேற்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.