தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழகம், கேரளத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
தமிழகம், கேரளத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு (கோப்புப்படம்)
Updated On :13 நவம்பர் 2020, 11:25 am

DIN

தமிழகம் மற்றும் கேரளத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  

இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தீபாவளி நாளன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று தெற்கு கேரளத்திலும் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 17-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.