தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.


புது தில்லி: தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பட்டாசு விற்பனையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெலங்கானாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து பிறப்பித்த உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்து, தீபாவளியன்று பசுமைப் பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கத் தடைக்கோரி வழக்கறிஞர் இந்திரா பிரகாஷ் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், மாநிலத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...