நவ. 21-ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவ. 21-ல் தமிழகத்திற்கு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

நவ. 21-ல் தமிழகத்திற்கு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறை சார்ந்த பணிகளுக்காக அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக சார்பில் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகைபுரியவுள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
நவம்பர் 21-ஆம் தேதி தமிழகம் வரும் அமித் ஷாவிற்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேல்யாத்திரை விவகாரத்தில் பாஜக தொண்டர்கள், அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...