சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தெலங்கானாவில் மிகக்குறைவாக பதிவான கரோனா

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில், இன்று 661 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 நவம்பர் 2020, 6:12 am

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில், இன்று 661 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, புதிதாக 661 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக பதிவாகி வந்த தொற்று எண்ணிக்கையை விட இது குறைவானது. இம்மாதத்தில் முதல்முறையாக 700-க்கும் குறைவாக தொற்று பதிவாகியுள்ளது.

எனினும் தெலங்கானாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.57 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 15,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,404-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.54-ஆக பதிவாகியுள்ளது. தேசிய அளவோடு ஒப்பிடும்போது 1.5 சதவிகிதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.