ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்: அமித் ஷா, நட்டாவிற்கு கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமித் ஷாவும், ஜெ.பி. நட்டாவும் மாதமொருமுறை மேற்குவங்கத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா - பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
Updated On :18 நவம்பர் 2020, 12:13 pm

DIN

கொல்கத்தா: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமித் ஷாவும், ஜெ.பி. நட்டாவும் மாதமொருமுறை மேற்குவங்கத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே தேர்தலையொட்டி கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனித்தனியாக மாதமொருமுறை மேற்குவங்கத்திற்கு வருகை புரிய வேண்டும் என்று திலிப் கோஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக இருவரும் தனித்தனியாக மேற்குவங்கம் சென்று வருகின்றனர்.

இம்மாதம் ஜெ.பி. நட்டா இருமுறையும், அமித் ஷா மூன்று முறையும் மேற்குவங்கத்திற்கு வருகை புரிந்துள்ளதாக மாநில பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், ''மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே தேர்தல் முடியும் வரை மேற்கு வங்கத்திற்கு மாதமொருமுறை அமித் ஷாவும், நட்டாவும் வருகைபுரிய வேண்டும். தலைவர்களின் வருகை தொண்டர்களை உற்சாகப்படுத்தும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.