விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

டிச.14-இல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் அறிவிப்பு

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

News image
ராம்விலாஸ் பாஸ்வான்
Updated On :19 நவம்பர் 2020, 1:49 pm

DIN

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

மத்திய அமைச்சராக இருந்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலமானார். இந்நிலையில் காலியான ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன்படி கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.