மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நுரையீரல் தொற்று: தில்லியிலிருந்து கோவா வந்து சேர்ந்தார் சோனியா

நுரையீரல் தொற்று காரணமாக தில்லியிலிருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தனது மகன் ராகுலுடன் கோவாவிற்கு வந்து சேர்ந்தார்.

News image

சோனியா காந்தி தனது மகன் ராகுலுடன் கோவாவிற்கு வந்து சேர்ந்தார் (கோப்புப்படம்)

Updated On :20 நவம்பர் 2020, 1:09 pm

நுரையீரல் தொற்று காரணமாக தில்லியிலிருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தனது மகன் ராகுலுடன் கோவாவிற்கு வந்து சேர்ந்தார்.

நாள்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு தில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

காற்று மாசு அதிகரித்து வருவதால் தில்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு சோனியா காந்தி தங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மகன் ராகுல்காந்தியுடன் தில்லியிலிருந்து புறப்பட்டு கோவாவிற்கு சோனியா காந்தி வெள்ளிக்கிழமை மாலை வந்து சேர்ந்தார்.

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் சோனியா காந்திக்கு ஆஸ்துமாவும் அதிகரித்துள்ளது. 

சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டிற்கும் சென்றார். அவருடன் ராகுல்காந்தியும் சென்றிருந்தார்.

இதனால் செப்டம்பர் 14 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இருவரும் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோனியாகாந்தி கோவாவில் சில நாள்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.