அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனா பாதிப்பு 90,50,598 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 90,50,598 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.78 லட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2020, 4:36 am

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 90,50,598 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.78 லட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,232 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 90,50,598 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 564 போ் கரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,32,726 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.46 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 4,39,747 போ் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 49,715 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,78,124 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி நவம்பா் 20-ஆம் தேதி வரை 13,06,57,808 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 10,66,022 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.