சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை: இர்பான் பதான்

ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

News image

கே.எல்.ராகுல்

படம் | AP

Updated On :27 மார்ச் 2026, 10:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. சின்னசாமி திடலில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கே.எல்.ராகுல் 500 ரன்கள் அடிக்கக் கூடியவர். அவர் எப்போதும் ரன்கள் குவிக்கக் கூடியவர் மற்றும் அணிக்கு தொடர்ச்சியாக சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கக் கூடியவர். ஐபிஎல் தொடரில் விளையாடும் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. கே.எல்.ராகுலின் ஸ்டிரைக் ரேட் குறித்து சில நேரங்களில் விமர்சனங்கள் இருக்கும். ஆனால், போட்டிகளில் வெற்றி பெறுவதால் ஸ்டிரைக் ரேட்டை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

கடந்த ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் 53.90 சராசரியுடன் 539 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். தில்லி கேபிடல்ஸுக்காக கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரரும் கே.எல்.ராகுல்தான்.

இதுவரை 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 5222 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் 5 சதங்கள் மற்றும் 40 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் 14 போட்டிகளில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார்.

ஐபிஎல் தொடரில் 6000 ரன்கள் குவித்துள்ள 5-வது வீரர் என்ற சாதனையை நோக்கி கே.எல்.ராகுல் நகர்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 6000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளனர்.

தில்லி கேபிடல்ஸ் அணி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னௌவில் நடைபெறும் தனது முதல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian cricketer Irfan Pathan has said that there is no doubt that KL Rahul is the best player in the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.