நடிகர் தனுஷ் திரைப்படத்தினை தமிழகம் முழுவதும் பிரபலமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுமென அறிவித்துள்ளது.
போர் தொழில் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக ’கர’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் 1990-களில் நடக்கும் வங்கிக் கொள்ளைப் பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு கர படத்தின் முகங்கள் விடியோ வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. முன்னதாக, நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தினையும் இந்த நிறுவனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Happy to announce that the Tamil Nadu theatrical release of #Kara is bagged by @RedGiantMovies_ ð£#FacesOfKara video drops today at 5 PM â¤ï¸#KaraFromApril30
— Vels Film International (@VelsFilmIntl) March 27, 2026
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical ð¥@dhanushkraja @VelsFilmIntl⦠pic.twitter.com/hQ5UlnGVtj
Summary
Red Giant to Release Dhanush's Film kara!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் நிறைவடையும் தனுஷின் ஓம் படப்பிடிப்பு?

காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி... தனுஷைச் சந்தித்த பார்த்திபன்!

தெறிக்குது சியா என்ட்ரி! மிரட்டும் சாய்... 2 கோடி பார்வைகளை நெருங்கும் ஓம் முதல் பாடல்!

இதயம் முரளி திரைப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




