திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

ரூ. 50 கோடி வசூலித்த கர?

கர வசூல் குறித்து...

Poster for the movie Kara.

கர திரைப்படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / தனுஷ்.

Published On :

நடிகர் தனுஷின் கர திரைப்பட வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. போர்தொழில் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய படமென்பதால் தனுஷ் ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால், தொய்வான கதை - திரைக்கதையால் கிரைம் திரில்லருக்கு உண்டான பதற்றமும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கான அழுத்தமும் சரியாக பதிவாகவில்லை என எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது.

இதனால், தனுஷ் ரசிகர்களும் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 80 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதால் வணிக ரீதியாக இப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தோல்விப்படமாகவே அமைந்துள்ளதாகவும் தெரிகிறது.

Information has emerged regarding the box office collections of actor Dhanush's film, kara

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.