யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். 

News image
உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
Updated On :22 நவம்பர் 2020, 6:20 am

DIN

உன்னாவ்: உத்தரப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். 

தில்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது.

82 பயணிகளுடன் உத்தரப்பிரதேசத்தின் சிர்தார்பூர் அருகே வந்துகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து விரைந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுகாயமடைந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு  மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.