டேராடூனில் வார இறுதி முழு முடக்கம் இல்லை: உத்தரகண்ட் அரசு

உத்தரகண்ட் தலைநகரான டேராடூனில் வார இறுதி பொதுமுடக்கம் இல்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
டேராடூனில் வார இறுதி முழு முடக்கம் இல்லை: உத்தரகண்ட் அரசு (கோப்புப்படம்)
டேராடூனில் வார இறுதி முழு முடக்கம் இல்லை: உத்தரகண்ட் அரசு (கோப்புப்படம்)

உத்தரகண்ட் தலைநகரான டேராடூனில் வார இறுதி பொதுமுடக்கம் இல்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

டேராடூனில் வார இறுதி நாள்களில் சந்தைகள் மற்றும் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மாநில அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.

டேராடூனில் வார இறுதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ருந்த நிலையில், கரோனா கட்டுப்பாட்டால் பொதுமுடக்கம் திரும்பப் பெறப்பட்டது. 

எனினும் கடைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக சந்தைகள் மற்றும் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள உத்தரகண்ட் அரசு, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக மட்டுமே சந்தைகள், கடைகள் மூடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வார இறுதி பொதுமுடக்கம் இல்லை. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

அதன்படி வார இறுதி நாள்களில் காய்கறி விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூனில் உள்ள சந்தைகள் மற்றும் அனைத்துக் கடைகளையும் சுத்திகரிக்கும் பணிகளுக்காக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவத்சவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com