காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராஜ்கோட் மருத்துவமனை தீ விபத்து: வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி  5 நோயாளிகள் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், வேதனையை வெளிப்படுத்தியுள்ள

News image
ராஜ்கோட் மருத்துவமனை தீ விபத்து: வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம்
Updated On :27 நவம்பர் 2020, 9:20 am

ANI


புது தில்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி  5 நோயாளிகள் பலியான சம்பவத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.

"இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் நிச்சயம் இது ஒரு முதல் சம்பவமாக இருக்காது. எனவே, இதனை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்கிறோம்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

கரோனா மருத்துவமனையில் நிகழும் முதல் சம்பவமல்ல இதுவென்றும், இது தொடர்பாக முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் நிகழும் தீவிபத்துகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ராஜ்கோட் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.