சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு கரோனா; 75 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :28 நவம்பர் 2020, 3:54 pm

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 5,965 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,14,515 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 3,937 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 16,76,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46,986 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 18,14,515 பேர் சிகிச்சியில் உள்ளனர். 5,28,462 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.