ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

இயக்குநர் எச். வினோத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பற்றி...

Director H. Vinoth at the Jananayagan music launch event.

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எச். வினோத். - படம்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.

Published On :10 ஏப்ரல் 2026, 9:54 am IST

சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்று இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.

தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.

தற்போது, மறுதணிக்கை நிறைவடைந்ததாகவும் தேர்தல் நிறைவடைந்த பிறகு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வியாழக்கிழமை மாலை வெளியான நிலையில், இன்று அதிகாலை 3 மணிநேர முழுப் படமும் வெளியாகியுள்ளது.

இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் எச். வினோத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டுக்கு முன்பே அது கசிவது மிகப்பெரிய வலியைத் தருகிறது. தயவுசெய்து அதனைப் பகிராமல் ஆதரவளியுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எச். வினோத் பதிவு

எச். வினோத் பதிவு - Instagram

Summary

Please do not share the movie Jana Nayagan - Director H. Vinoth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.