வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாதுகாப்புப் படை வீரர்கள் பணி மாறும் நிகழ்வை  பார்வையிட்டார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவ. 28) நடைபெற்ற பாதுகாப்புப் படை வீரர்கள் பணி மாறும் நிகழ்வை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பார்வையிட்டார். 

News image
பாதுகாப்புப் படை வீரர்கள் பணி மாறும் நிகழ்வை  பார்வையிட்டார் குடியரசுத் தலைவர்
Updated On :28 நவம்பர் 2020, 12:35 pm

DIN

புது தில்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவ. 28) நடைபெற்ற பாதுகாப்புப் படை வீரர்கள் பணி மாறும் நிகழ்வை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பார்வையிட்டார். 

முதலாவது கூர்கா படைப்பிரிவின் ஐந்தாவது பிரிவு தனது மூன்றரை ஆண்டுப் பணியை நிறைவு செய்துள்ளதை அடுத்து சீக்கியப் படைப்பிரிவின் ஆறாவது பிரிவிடம் தனது பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

ராணுவத்தின் பல்வேறு காலாட்படைப் பிரிவுகள் சுழற்சி முறையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். 

இந்த ராணுவ பாதுகாப்புப் படை, குடியரசு தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதுடன், முக்கிய விருந்தினர்களின் வருகையின்போது அணிவகுப்பு மரியாதையை அளிப்பது, குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு, முப்படையினரின் பாசறை திரும்பும் விழா ஆகியவற்றிலும் பங்கேற்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.