விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ராம்விலாஸ் பாஸ்வானுக்கு தில்லி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு தில்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :4 அக்டோபர் 2020, 6:32 am

DIN


புதுதில்லி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு தில்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்க பதிவில், "என தந்தை கடந்த பல நாள்களாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை நிகழ்ந்த சில திடீர் முன்னேற்றங்கள் காரணமாக, அவரது இதய அறுவை சிகிச்சை தாமதமாக இரவில் நடத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால், வரும் வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்.

இந்த தருணத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி "என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.