டி.கே.சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

டி.கே.சிவகுமார்

டி.கே.சிவகுமார்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
கர்நாடகம், தில்லி மற்றும் மும்பையில், டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த 2017ல் வருமான வரி சோதனையில், 8.6 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்றும் மேலும் அந்த பணம் 11 கோடியாக மாற்றப்பட்டுள்ளது என்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக டி.கே.சிவகுமார் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் இடைத்தேர்தலுக்கான எங்கள் தேர்தல் பணிகளை தகர்த்தெறியும் பாஜகவின் முயற்சி என சிபிஐ சோதனை குறித்து காங்கிரஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...