/

மகாராஷ்டிரத்தில் மேலும் 13,395 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் மேலும் 13,395 பேருக்கு கரோனா தொற்று

Updated On :8 அக்டோபர் 2020, 3:02 pm

மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,395 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 13,395 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,93,884 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 358 பேர் பலியாகியுள்ளனர். 15,575 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 39,430 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 11,96,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,41,986 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.