பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தேசிய விமானப்படை தினம்: வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated On :8 அக்டோபர் 2020, 3:43 am



புதுதில்லி: இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது. விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது.  

விமானப்படையை நவீனமயமாக்குவதன் மூலம் விமானப்படை திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம். விமானம் மற்றும் விண்வெளி தொழில்களில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம்பெறுவதே இலக்கு.

நமது வான் எல்லையை விமானப்படை கருத்துடன் பாதுகாத்து வருகிறது என்று தனது வாழ்த்து செய்தியில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.