/

'நாட்டின் இறையாண்மையைக் காக்க எந்த சூழலிலும் விமானப்படைத் தயார்'

நாட்டின் இறையாண்மையைக் காக்க எந்த சூழலிலும் விமானப்படைத் தயாராக உள்ளதாக விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் பதாரியா தெரிவித்துள்ளார். 

News image
விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் பதாரியா
Updated On :27 ஜனவரி 2024, 5:34 pm

DIN

நாட்டின் இறையாண்மையைக் காக்க எந்த சூழலிலும் விமானப்படைத் தயாராக உள்ளதாக விமானப்படைத் தளபதி ராகேஷ்குமார் சிங் பதாரியா தெரிவித்துள்ளார். 

இந்திய விமானப்படையின் 88-ஆம் ஆண்டு நாளையொட்டி காசியாபாத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் விமானப்படையை சேர்ந்த வீரர்கள் வானில் வட்டமிட்டபடி பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர்.

முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பை மரியாதையை 
விமானப்படைத் தளபதி பதாரியா ஏற்றுக்கொண்டார்.

பின்னர் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், ''உலகம் முழுவதும் கரோனா பரவி வருவதால் இந்த ஆண்டு யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அமைந்துள்ளது. எனினும் இந்த இக்கட்டான சூழலிலும் முழு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனை ஐ.ஏ.எஃப் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதை வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்திய விமானப்படை உருவாகி 88 ஆண்டுகள் ஆகின்றன. நாட்டின் இறையாண்மையையும், நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.