/

மும்பைவாசிகளுக்கு கூகுள் வரைபடத்தில் புதிய வசதி

மும்பையில், கரோனா நோயாளிகள் அதிகம் இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கூகுள் வரைபடத்தின் வாயிலாக மும்பைவாசிகள் தெரிந்து கொள்ள புதிய வசதி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image

மும்பைவாசிகளுக்கு கூகுள் வரைபடத்தில் புதிய வசதி

Updated On :8 அக்டோபர் 2020, 6:02 am


மும்பை: மும்பையில், கரோனா நோயாளிகள் அதிகம் இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கூகுள் வரைபடத்தின் வாயிலாக மும்பைவாசிகள் தெரிந்து கொள்ள புதிய வசதி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிஹன்மும்பை மாநகராட்சி அளிக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து, அவ்வப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கும் வர்த்தகம் மற்றும் சொந்த காரணங்களுக்காக செல்ல வேண்டியிருப்பவர்கள், கூகுள் வரைபடம் மூலமாக, மும்பை மாநகராட்சியில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை எளிதாக அறிந்து கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை நிலவரப்படி 14,80,489 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 14,578 பேர் தற்போது கரோனா பதித்து சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 355 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு மட்டும் பலி எண்ணிக்கை 39,072 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சேவை விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.