

தில்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் (வயது 74) வியாழக்கிழமை காலமானார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருப்பவர் ராம்விலாஸ் பாஸ்வான். பிகார் மாநிலத்தின் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரான பாஸ்வான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்வான் வியாழக்கிழமை காலமானார். அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராம்விலாஸ் பாஸ்வான் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.