ஜார்கண்டில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 5 பேர் கைது
ஜார்கண்டில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


ஜார்கண்டில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெத்பூரில் தமது சக தோழனுடன் வந்த 17 வயது சிறுமியை கடந்த வியாழக்கிழமை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர்.
கட்டாயப்படுத்தி காளியதி கெளசாலா பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்ற அவர்கள், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
இதில் ஒருவன் சிறுவன் என்பதால், அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். மற்ற நான்கு பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...