பிகார் தேர்தல்: நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை சமர்பித்தது காங்கிரஸ்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.


பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், குலாம் நபி ஆசாத், தாரிக் அன்வர் உள்ளிடோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
3 கட்டங்களாக நடைபெறவுள்ள வாக்குப்பதிவில், ராகுல் காந்தி தலா 2 பொதுக் கூட்டங்கள் என மொத்தம் 6 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
243 பேரைவத் தொகுதிகள் கொண்ட பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...